அறம்,பொருள்,இன்பம்,வீடு
என்பதினை அடைய மக்கட்கு மூல காரணமாக இருப்பது ஆரோகியமேயாகும். நோய்
தேகத்திலும் மனதிலும் துயரத்தை விளைவிக்கும் நிலை. நோயற்ற நிலையே
ஆரோக்கியம். மனிதனிடையே உள்ளவற்றில் மிகவும் சிறந்தது உயிரே ஆகும்.
உயிருக்கு அடுத்தப்படியாக ஆரோக்கியத்தை கூறலாம். ஆரோக்கியமில்லாத ஒருவனுடைய
வாழ்க்கையால் எந்த ஒரு பயனுமில்லை. இந்த ஆரோக்கியம் ஒருநாள் இரவில்
வந்துவிடாது. பெரும்பாலோர் உடல் ஆரோக்கியம் குறைய தொடங்கும் போதுதான்
ஆரோக்கியத்தை பற்றி சிந்திக்கிறார்கள். அது தவறானது நாம் ஆரோக்கியமாக
உள்ளபோதுதான் உடல் ஆரோக்கியத்தை பற்றி சிந்தித்து தொடர்ந்து பாதுகாக்கும்
செயலினை மேற்கொள்ளவேண்டும். அதுதான் நமது வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக
இருக்க வழி வகுக்கும்.
இந்த ஆரோக்கியத்தை பெற நம் உண்ணும் உணவே சிறந்த மருந்தாகும்.
அந்த உணவுகளை அறிந்து உண்ணுவதால் நமது ஆரோக்கியம் நிலைத்திருக்கும் .
இவற்றில் நமக்கு அதிகம் பயன் தருவது விலை அதிகமில்லாத சத்தான கீரைகள்தான் மற்றும் பழங்கள் .
கீரைகள்
நமது அன்றாட உணவில் காரஞ்சேர்ந்த உணவுகளை குறைத்துக்கொண்டு பல
சத்துக்களை உள்ளடக்கிய கீரை வகை உணவுகளை உண்ணவேண்டும் . ஒவ்வொரு நாளும்
உணவில் நிச்சயம் ஏதாவது ஒரு கீரையினை சேர்த்துக்கொள்ளவேண்டும்.
"முருங்கைக்கீரை
முட்ட வாயு ; ஆத்திக்கீரை அண்ட வாயு" என்று கூறி சிலர் கீரைகளை உணவாக
சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். என்ன சொல்வது இவர்களின் அறியாமையை. 'வாயு' என்பது நமது வாழ்க்கையில் உள்ளதே தவிர முருங்கைகீரையிலும்,ஆத்திக்கீரையிலும் இல்லை என்பது விஞ்ஞான ஆராய்ச்சியின் அனுபவம்.
நமது நாட்டு அறிய பொக்கிஷமான கீரை -இலைகளில் உள்ள வைட்டமின் கணிசத்தை சற்று ஆராய்ந்து பார்ப்போம்:
வைட்டமின்
' ஏ ' மகிமையை தவிர இன்னும் பிற மகிமைகளும் கீரைகளுக்கு உள்ளன. போலிக்
ஆசிட் (FOLIC ACID) என்ற வைட்டமின் ' பி 'யின் ஒரு ரகம் கீரைகளில் -
இலைகளில் ஏராளமாய் உண்டு. இந்த வகை ரகத்தால் தான் ரத்தம் சோகைப்படாமல்
காப்பாற்றப்படுகிறது.
வைட்டமின் 'பி' & 'சி ' பற்றி சுருக்கமாக பார்க்கலாம் .
முருங்கைகீரையில்
அரிசிக்கு மும்மடங்கும். வெந்தயக்கீரையில் அரிசிக்கு இருமடங்கும்,
பசலைக்கீரையில் அரிசிக்கு மும்மடங்கும் வைட்டமின் 'பி' இருக்கிறது.ஆரஞ்சில்
வைட்டமின் ' சி ' 60 யூனிட் என்று அளவுகோல் வைத்துக்கொண்டால் கீரை-
இலைகளில் கணிசத்தைக் காணலாம்.
கீரைகளில்
புரதக் கணிசமும் அதிகமாகவே உள்ளது. அன்றாட உணவில் கீரையினை மசியலாகவோ
துகையலாகவோ அல்லது பொரியலாகவோ சேர்த்துக்கொள்ளவேண்டும். கீரையினை தினசரி
உணவில் சேர்த்தக் கொண்டால் மலச்சிக்கல் நீங்கிவிடும்.
பழங்கள்
நமது
உடலுக்கு கால்சியம், அயர்ன், பாஸ்பரஸ், பொட்டாசியம், தாதுப்பொருட்கள்,
வைட்டமின்கள்(Vitamins ) ஆகியவை இன்றியமையாதவை. பழங்களில் இவை அதிகம்
இருக்கின்றன.
புரோட்டீன் சத்துள்ள பழங்கள்
மனிதனின் தசைகளை உருவாக்குகின்ற புரோட்டின் சத்தைப் பேரிச்சம்பழம், அத்திப்பழம், திராட்சைப் பழம், மாதுளம் பழம், வாழைப்பழம் (நேந்திரம் பழம்), பாதாம் பருப்பு முதலியவற்றிலிருந்து பெறலாம்.
கால்சியம் சத்துள்ள பழங்கள்
எலும்புகளை
உருவாக்குகின்ற அல்லது பலப்படுத்தக்கூடிய கால்சியம் சத்தை தக்காளிப்பழம்,
ஆரஞ்சுப்பழம், கொய்யாப்பழம், திராட்சைப்பழம், பேரிச்சம்பழம் மற்றும் சீரகம்முதலியவற்றிலிருந்து பெறலாம்.
இரும்பு சத்து நிறைந்துள்ள பழங்கள்
ரத்தத்தை
உற்பத்தி செய்கின்ற 'அயர்ன்' என்ற இரும்பு சத்தானது உள்ள பழங்கள் ஆப்பிள்,
பேரீச்சை, திராட்சை மற்றும் பிஸ்தாப்பருப்பு போன்றவைகள் ரத்தத்திற்கு
இரும்பு சத்தினை அளிகின்றன .
பொட்டாசியம் சத்து
ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குகின்ற பொட்டாசியம் சத்து வெள்ளரிக்காயில் 42.6% உள்ளது.இவற்றை உண்டாலே இச்சத்தானது கூடும்.
பாஸ்பரஸ் சத்துள்ளபழங்கள்
மூளை
பலத்தை அதிகரிக்க இந்த பாஸ்பரஸ் நமக்கு அதிகளவில் உதவிபுரிகின்றன.
பாதாம்பருப்பு, அக்ரோட்டுக் காயும் அத்திபழத்துடன் சேர்த்து சாப்பிட்டால்
மூளையின் செயல்திறனை இவை அதிகரிக்கின்றன . மூளைக்கு தேவையான அணுக்களையும்
தாதுவினையும் பாஸ்பரஸ் சக்தி உற்பத்தி செய்கின்றன.
மூளைக்கு
அதிகளவில் வேலைக்கொடுகின்றவர்களுக்கு, பாஸ்பரஸ் சக்தி அவசியம் தேவையாகும்.
சிந்தனையாளர்கள்,விஞ்ஞானிகள் , ஆராய்ச்சியாளர்கள், மேடை பேச்சாளர்கள்
பாஸ்பரஸ் அதிகமுள்ள பழங்களை உண்ணுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.
பாஸ்பரஸ்
சக்தியுள்ள பழங்கள் ஆப்பிள், பேரீச்சம்பழம், அத்திப்பழம் மற்றும் பாதாம்
பருப்பு போன்றவைகள் ஆகும். ஆப்பிள் வாங்க முடியாதவர்கள் தான் நம்நாட்டில்
அதிகம் அவர்கள் தினசரி இரவு படுக்கும் முன்பு பேரீச்சம்பழத்தை (10 முதல்
20) உண்டு பால் அல்லது சுத்த நீரினை பருகினால் மனபலத்தினை அதிகரிக்க
செய்யும் மற்றும் மூளைக்கு பலத்தை தரும்.
தேன் சிறப்பு
தேன்
விலைமதிக்கமுடியாத உணவு பொருள். இது ஒரு அறிய வகை மருந்து. தென்னை
உரிமைகொண்டாடாத நாடுகளே இல்லை.சுத்தமான தேன் ஒருபோதும் கெட்டுப்போகாது.
இவற்றின் பயன்கள் அனைத்தையும் யாரும் அறிதிருக்கமாட்டார்கள்.
தேனில்
78 பங்கு கரி நீரைகளும் (Carbo Hydrates) 18 பங்கு தண்ணீரும், 0.2 பங்கு
தாதுப்பொருட்களும், 3.8 பங்கு பயன்தரும் பலவித நுண்ணிய வளங்களும்
இருக்கின்றன. இதுதான் என குறிப்பிட்டு சொல்லமுடியாத பல நல்ல பொருள்களும்
இதில் அடங்கியுள்ளன. பூவிலுள்ள மகரந்தம், பிசின், வச்சிரம் (Glue)
எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணைகள் போன்றவைகள் அவற்றில் உள்ளன. மகரந்தம்
என்பது ஒரு நேர்த்தியான பொடி. அதில் பிசிதம் நிரம்ப உண்டு. அது
சிறுவர்களுக்கும்,குழந்தைகளுக்கும் தலைசிறந்த ஆகாரமாகும்.
தேன் இருதய வளர்ச்சிக்கு மிகமுக்கியமானது ஆகும். இதனை சாப்பிடுவதால் மனம் தேறுவதுடன் இருதயமும் துப்புரவாகி வலிமை அடைகிறது.
மருத்துவ
ஆராய்ச்சியின் முடிவில் தேன் மிக சிறந்த நோய் தீர்க்கும் மருந்து என
கண்டறிந்துள்ளனர். காமாலை, சீதபேதி நோய்களையும், மூத்திரப்பை மற்றும்
இருதயம் முதலிய முக்கிய உறுப்புகளின் நோய்களை தீர்க்கும் நல்ல மருந்து தேன்
என தெரிவிக்கின்றனர். நாம் உண்ணும் உணவினை செரிக்கும் நல்ல மருந்து தேன் .
புலால் உண்ணுவதை விட தேனினை குடித்தால் அதிக உற்சாகமும் ஆற்றலும் உண்டாகிறது.
திருமணமான
தம்பதிகள் இரவில் பால் பருகும் போது ஒரு தேக்கரண்டி தேனினை சாப்பிட்டு
வந்தால் சுக்கில கட்டும் ஆற்றலும் மகிழ்ச்சியையும் அதிகப்படுத்துகிறது.
பித்தம்
அதிகமாகி அல்லல்படுபவர்கள் இஞ்சியை நன்றாக கழுவி சுத்தம் செய்துக்கொண்டு
சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு தேனில் இரண்டு அல்லது முன்று நாட்கள்
ஊறவைத்து அதிகாலையில் இரண்டு அல்லது மூன்று துண்டுகள் சாப்பிட்டுவந்தால்
எப்படிப்பட்ட பித்தமும் நீங்கிவிடும்.
குழந்தைகளுக்கு
தினந்தோறும் அரை தேக்கரண்டி தேனினை கொடுத்து வந்தால். குழந்தைகளின்
தசைகள் உறுதியாகும். ரத்தம் சுத்தமாகி ஆற்றலுடனும், அழகுடனும்
விளங்குவார்கள்.
கடும்
வயிற்று வலியா கவலை வேண்டாம். ஒரு டம்ளர் கொதிக்கும் வெந்நீரில் ஒரு
தேக்கரண்டி தேனினை விட்டு நன்றாக கலக்கி பருகிவிட்டால் பதினைந்து
நிமிடங்களில் வயிற்று வலி பறந்துவிடும்.
தேனின் வகைகள்
சுத்தமான
தேன் தனிப்பட்ட மனமும் சுவையும் கொண்டது. சுத்த வெள்ளையாகவோ அல்லது
கருப்பாகவோ இருப்பது நல்ல தேன் என்று தெரிந்துகொள்ளலாம். தேனின் மனமும்,
நிறமும் எந்த பூக்களிலிருந்து தேனீக்கள் மது சேர்க்கின்றதோ அப்பூக்களை
சார்ந்தே அது இருக்கும். வேப்பம்பூவில் சேகரிக்கப்பட்ட தேன் சற்று கசந்தே
இருக்கும். ஹோலி தேன் கருப்பாக இருக்கும் நல்ல வாசனை கமழும். மஞ்சள் நிற
தேன் பல வகை காடுகளில் சேமித்து வைக்கப்பட்ட தேனாகும். பளிங்கு போன்று
முகம் பார்க்ககூடிய தெளிவுடைய தேனை சற்று நேரம் வைத்திருந்தால் உறைந்து
விடும். இதுவும் மிகவும் மேலான தேனாகும்.
இதில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய்தான் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது.
சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.
உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள்!
நமது வீட்டிலேயே கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு உடல் பருமனை சுலபமாக கட்டுக்குள் கொண்டுவரும் முறைகளை பற்றி பார்போமா..
உடற்
பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின்
கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய்
ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே சில வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி
அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட இதோ சில முக்கியமான குறிப்புகள்...
1/4
தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை
நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து
எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.
தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடித்து வரவும்.
காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச் செய்தால் உடல் எடை கண்டிப்பாக குறையும்.
தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
பிரஷ்ஷான தக்காளியுடன் வெங்காயத்தை சாப்பிட்டு பிறகு எலுமிச்சை சாற்றை குடிக்கவும்.
இஞ்சியை
மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு அதை கொதிக்க விடவும். நன்றாக கொதி
வந்த பிறகு எலுமிச்சை துண்டங்களை சேர்க்கவும். இதனை சூடாகவோ அல்லது ஆறிய
பிறகு பாட்டிலில் ஊற்றி வைத்து போகும் இடங்களுக்கு கொண்டு செல்லலாம். இது
பசியை ஆற்றும் தன்மை கொண்டது. இதனால் உடல் எடை குறையும்.
அரிசி, உருளைக்கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும். பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
உயர் கலோரி தின்பண்டங்களான ஐஸ்கிரீம், சாக்லேட், இனிப்புகள், வெண்ணெய், நன்றாக சமைக்கப்பட்ட உணவு, ஆகியவைகளை தவிர்க்கவும்.
பச்சையான
முட்டை கோஸ் அல்லது சமைக்கப்பட்ட கோஸ்காயில் மாவுச்சத்தை கொழுப்பு சத்தாக
மாற்றமடைவதை தடுக்கூடிய சத்துகள் உள்ளது. எனவே முட்டைக் கோஸ் உடல் பருமனை
குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தாம்பத்ய உறவு மேம்பட உதவும் கற்றாழை
கற்றாழை
இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகாது. நமக்கு ஏற்படும் பல
நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே
கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப் பொருட்கள் நமக்கு தான் நிறைய
தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும்.
கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும்.
இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.
கற்றாழையில்
சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங்
கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக்
கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும்
‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து
வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.
கற்றாழை
உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருட்கள் உற்பத்தியிலும்,
மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும்
மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம்
பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழை என வழங்கப்படுகிறது.
சோற்றுக்
கற்றாழை மடல்களை பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு
துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக்
கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையை கையால் தொட்டால் வாய்
கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல்
குணமும், கசப்பும் குறைந்துவிடும்
.
தாம்பத்திய உறவு மேம்பட சோற்றுக்
கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து, இட்லிப்
பானையில் பால் விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து
எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு
தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும்.
தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.
கூந்தல் வளர சதைப்பிடிப்புள்ள
மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து,
இதில் சிறிது படிக்காரத் தூளைத தூவி வைத்திருந்தால், சோற்றுப் பகுதியில்
உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய்
அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீரை சுண்டக் காய்ச்சி எடுத்து
வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும்.
நல்ல தூக்கம் வரும்.
கண்களில் அடிபட்டால் கண்களில்
அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச்
சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில்
நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு
துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து
நீர்சொட்டுவதைச் சேகரம் செய்து எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக
கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு
மாறும்.
குளிர்ச்சி தரும் குளியலுக்கு மூலிகைக்
குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரைக் கிலோ
எடுத்து ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து
எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும்.
இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப்
பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.
முகத்திலுள்ள
கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும
நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல பலன்
கிடைக்கும்.
ஆண்கள்
சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம்
பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’
கற்றாழைச் சாறுதான்.
இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.
தோலோடு
கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை
கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து
குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை
முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல்
குளிர்ந்து காணப்படும்.
பிரயாணக்
களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில்
ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப்
புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது.
முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும்
தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல்
மறையும்.
கண்நோய்
கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம்.
விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு
தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட
கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.
கேசப்
பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும்
பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை
நீக்குகிறது.
தோல்
இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய்
எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும்.
எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.
நமது
தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது.
வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு.
சருமத்திலுள்ள
கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில்
அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை
குணப்படுத்துகிறது.
இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.
மிளகின் மருத்துவ குணங்கள்!
ஏதோ காரத்திற்காக உணவுப்பொருளில் சேர்க்கப்படுவது மட்டுமல்ல மிளகு!! அதன் அரிய மருத்துவ குணங்கள் இன்றும் பலரும் அறியாததே!
1. மிச்சிகன்
பல்கலைக் கழக புற்றுநோய் ஆய்வு மையத்தின் ஆய்வின் படி மார்பகப் புற்றுநோய்
மற்றும் கேன்சர் கட்டிகள் வளர்ச்சியை தடுப்பது மிளகு. மிளகுடன் மஞ்சள்
சேர்த்தால் புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக அந்த ஆய்வு
தெரிவித்துள்ளது.
மேலும்
மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில்
உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
சருமப் புற்று நோய், வயிற்று புற்றுநோய் மற்றும் குடல் கேன்சர் நோய்களையும் மிளகு தடுத்து வருவதையும் பல ஆய்வுகள் கூறியுள்ளன.
நமது சமையலில் தினமும் ஒரேயொரு தேக்கரண்டி மிளகுத்தூளை சேர்ப்பது மிகவும் ஆரோக்கியமானதாகும்.
2. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது: நாக்கின்
ருசி ஆதாரங்களை தூண்டி விட்டு வயிறு ஐட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கச்
செய்ய மிளகு சிக்னல் கொடுக்கிறது. இந்த அமிலம்தான் ஜீரணமாவதற்கு மிகவும்
முக்கியமானதாக இருந்து வருகிறது. அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல்,
அமிலச்சுரப்பு போன்றவற்றை மிளகு தடுக்கிறது.
3. உடல் எடையைக் குறைக்க உதவுவது:
நாம்
எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் கரு மிளகு அதன் ஊட்டச்சத்துகளை உறிஞ்சும்
தன்மை கொண்டது. மேலும் மிளகின் புற அமைப்பு கொழுப்பு செல்களை சிதைக்கிறது.
இதனால் உடல் பருமனாவதையும் தடுக்கலாம். மேலும் உடல் வியர்வையை
அதிகரிக்கிறது. சிறுநீர் சீராக வெளியேற உதவி புரிகிறது. இதனால் உடலில் உள்ள
கூடுதல் நீர் மற்றும் நச்சுப் பொருட்களை அது வெளியேற்றுகிறது. இவைதான்
உடல் எடையைக் குறைக்கும் நடவடிக்கைகளாகும்.
4. வாய்வை கட்டுப்படுத்துகிறது: சரியாக
ஜீரணமாகாமல் அல்லது மலச்சிக்கலால் ஏற்படும் வயிற்று வலியை கருப்பு மிளகு
பெரிதும் குறைக்கிறது. மிள்காய்ப்பொடிக்கு பதிலாக நாம் இனிமேல்
மிளகுப்பொடியை பயன்படுத்தலாமே.
5 தலைப்பொடுகை ஒழிக்கும் மிளகு: கருப்பு மிளகை நன்றாக பொடி செய்து ஒரு கப் தயிருடன் கலக்கவும். இந்தக் கலவையை தலையில் நன்றாக பரவலாகத் தடவவும். அரை மணிநேரம் கழித்து தலை முடியை நன்றாக அலசவும். இப்போது ஷாம்பூ பயன்படுத்தக்கூடாது. மறுநாள் ஷாம்பூ போட்டு குளிக்கவும்.
மேலும் கருமிளகு மனச்சோர்வையும், களைப்பையும் போக்குகிறது. மூளையின் அறிதல் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது.
இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!
தூக்கமின்மை
அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில்
ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்.
அதை
எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச
கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை
கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா?
அப்படி
தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல
புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ண வேண்டும். நூறு எண்ணி
முடிக்கிறதுக்குள்ள உறக்கம் வந்துவிடும். பலன் என்னவா இருக்கும்னு.
நினைக்கிறீங்க…? வேற ஒண்ணுமில்ல, குழப்பம்தான். அட ஆமாங்க சில சமயம் நூறு
எண்ணி முடிக்கிறதுக்குள்ள தூக்கம் வந்துவிடும். பல சமயங்களில் 1000 வரை
எண்ணிக்கிட்டிருந்தாக் கூட தூக்கமே வராது.
ஆனா
இப்போ, இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர
காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி விளக்கமாக
தெரிஞ்சிக்கலாம்
செர்ரி பழங்கள்: நம்
உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான
கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.
இந்த
கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும் திறனுள்ள மெலடோனின்
அப்படீங்கிற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம் தான் செர்ரிபழங்கள்.
அதனால இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.
வாழைப்பழம்: இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நம்ம வாழைப்பழத்துல நிறைய இருக்கு.
அது
மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் அப்படீங்கிற அமினோ அமிலமும் வாழைப்பழத்துல
இருக்குது. இந்த எல் ட்ரிப்டோபான் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5 HTP அப்படீங்கிற ஒரு ரசாயனமா மாறிவிடும். அதன் பிறகு இந்த 5 HTP-யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.
டோஸ்ட்: நாம பொதுவா காலை உணவா அதிகம் சாப்பிடுற டோஸ்டுக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்.
மாவுச்சத்து
நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டும். இந்த
இன்சுலின் ஹார்மோன் உறக்கத்தை தூண்டக்கூடியதாகும். இன்சுலின் ஹார்மோனானது
மூளையிலிருந்து ட்ரிப்டோபான் மற்றும் செரடோனின் ஆகிய ரசாயனங்களை ரத்தத்தில்
அதிகரிக்கச் செய்யும் சமிக்ஞைகளை உருவாக்கிறதாம். மூளையிலிருந்து
வெளியாகும் இவ்விரு ரசாயனங்களும் உறக்கத்தை தூண்டிவிடும் திறன் கொண்டவை
ஆகும்.
ஓட் மீல்: ஓட்ஸ் கஞ்சி சொல்லுவாங்களே அதத்தான் அமெரிக்காவில் ஓட் மீல் சொல்லுவாங்க.
அதாவது
மேலே சொன்ன டோஸ்ட் மாதிரியே இந்த ஓட்ஸ் கஞ்சியும் ரத்தத்துல இருக்குற
சர்க்கரை அளவை அதிகப்படுத்தி அந்த சர்க்கரை இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை
தூண்டிவிட அதன் விளைவாக உறக்கம் தூண்டும். மூளை ரசாயனங்கள் சுரந்து
கடைசியா… “உறக்கம் உன் கண்களை தழுவட்டுமே… நிம்மதி நெஞ்சினில் மலரட்டுமே…
அப்படீன்னு நாம தூங்கிடலாம்”
கதகதப்பான பால்: உறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில் நாம இன்னைக்கு பார்த்த மேலே இருக்குற 4 உணவுகளுமே புதுசுதான்.
ஆனா
பால் மட்டும் பழசுதான். ஆமாம் சின்ன வயசுலேர்ந்து ஒரு டம்ளர் பால்
சாப்பிட்டு படுத்தா நல்லா தூக்கம் வரும் அப்படீன்னு அம்மா காய்ச்சின பாலை
கொடுப்பாங்க இல்லையா?
ஆனா
நம்ம அம்மாவுக்கு இந்த பால்ல இருக்குற எந்த வேதியியல் மூலப்பொருள்
காரணமாக நமக்கு தூக்கம் வருதுன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை
வாழைப்பழத்துல
இருக்குற எல் ட்ரிப்டோபன் அமினோ அமிலம் பாலிலும் இருக்கிறது, அதுதான்
செரடோனின் உற்பத்தி மூலமா உறக்கம் வரவைக்கும். அதுமட்டுமல்லாமல் பாலில்
அதிக கால்சியம் இருப்பது உறக்கத்தை தூண்டும் என்று விஞ்ஞானிகள்
கூறுகிறார்கள்.
உறக்கம்
நல்லா வரனும்னா இனிமே யாரும் தூக்க மாத்திரைகளை சாப்பிடாதீங்க. அதுக்கு
பதிலா மேலே சொல்லியிருக்குற ஐந்து வகையான இயற்கை உணவுகளை சாப்பிட முயற்சி
பண்ணுங்க, ஏன்னா, அவசியமில்லாம மாத்திரைகளை சாப்பிடுறது உடலுக்கு கேடுதான்.
உலர் அன்னாசி பழமும் இரத்த உற்பத்தியும்!
தினம்தோறும் உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு டம்ளர் பாலில் பத்து
துண்டு அன்னாசி வற்றலை போட்டு ஊற வைக்க வேண்டும். பின்பு ஊறிய வற்றலை
எடுத்து முதலில் சாப்பிட்டு விட்டு அதன்பிறகு பாலையும் குடித்து
விடவேண்டும்.
இவ்வாறாக இரண்டு மாத காலத்திற்கு தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் உடலில்
நல்ல முறையில் இரத்தம் உற்பத்தியாகும். மேலும் உடல் சக்தி பெறும். பித்த
மயக்கம் சம்பந்தபட்ட அனைத்தும் முற்றிலுமாக நீங்கும்
பொதுவாகவே அன்னாசிபழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு நாவறட்சி நீங்கி தாகம்
தணியும் சுறுசுறுப்பு உண்டாகும். குறிப்பாக மனித உடலில் நோய் எதிர்ப்பு
சக்தியினை அதிகரிக்க செய்யக்கூடிய தன்மை அனைத்தும் அன்னாசிபழத்திற்கு
உள்ளது.
மாதுளையில்
இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம்
பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி
கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.
புளிப்பு
மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த
பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது.
பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான
குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால்
இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
தொடர்ந்து
நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால்
உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு
அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள்
மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
மாதுளம்பழத்தைச்
சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம்
பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள்
நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம்
பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால்,
ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம்
உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு
வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
மாதுளம்
பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம்
தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு
ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு
சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த
மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி,
மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.
மாதுளம் பூக்கள் 15 கிராம்
எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி
வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு
நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி,
வெப்பநோய் தீரும்.
வெந்தயத்தை
வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி,
வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள்
போகும்.
வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும். a
கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.
வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும்.
வெந்தயத்தை வறுத்து இத்துடன் வறுத்த கோதுமையைச் சேர்த்து காப்பிக்குப் பதிலாக வழங்கலாம் இதனால் உடல் வெப்பம் நீங்கும்.
வெந்தய லேகியம்: வெந்தயம், மிளகு, திப்பிலி,
பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து
சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல்,
வெள்ளை, மேல் எரிச்சல், குருதியழல், தலைகனம், எலும்பைப் பற்றிய சுரம்
தீரும்.
நீர் வேட்கை இளைப்பு நோய், கொடிய இருமல் இவைகளை விலக்கும். ஆண்மை தரும்.
வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய்
விட்டு வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி, பொருமல்,
வலப்பாடு இடப்பாட்டீரல் வீக்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.
மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை
இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி
உப்பு சேர்த்து சட்டியிலிட்டு அரைப்பாகம் சுண்டிய பின் இறக்கி சூட்டுடன்
சாப்பிட வெப்பத்தால் நேரிடும் சிற்சிலப் பிணிகள் தணியும்.
இத்துடன் வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை நெய், பால், சர்க்கரை சேர்த்து
கிண்டி உட்கொள்ள உடல் வலுக்கும். வன்மையுண்டாகும். இடுப்பு வலி தீரும்.
வெந்தயத்தை, சீமை அத்திப்பழம் சேர்த்தரைத்து கட்டிகளின் மீது பற்றுப்போட அவைகள் உடையும். படைகள் மீது பூச அவைகள் மாறும்.
வெந்தயத்தை, சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஒரே எடையாகச் சேர்த்து
குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை போகும்.
வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து உட்கொள்ள மலத்தை
வெளியேற்றும். இது மார்புவலி, இருமல், மூலம், உட்புண் இவைகளைப் போக்கும்.
ஒரு
மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை
ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம்
கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான்
தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல்
பயன்படுத்தலாமே!
அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ
குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும்
பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே
அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ்
கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை
வெளியாகியுள்ளது.
செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்...
அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில்
செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற
முறையில் செயல்படுகிறது.
அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து
இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில்
தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல்
தீரும்.
பிரசவத்திற்கு முன் வரும் உதிரப் போக்கைத் தடுக்க...
அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம்
பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச்
சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற
பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப்
போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.
மஞ்சள் காமாலை நீங்க...
அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம்
பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி
வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை
நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும். சுகப்
பிரசவத்திற்கு...
அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு
வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை
கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.
தொண்டைக் கட்டு இருமல் சளிக்கு...
அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1_2 கிராம் அளவில்
தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல்,
சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம்
நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.
பெண் மலடு நீங்க...
பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.
மலச்சிக்கல் நீங்க...
அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச்
சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து
சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.
சூடு தணிந்து சுறுசுறுப்பாக...
சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு
படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், இலகுவாக மல
விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச்
செய்யும்.
ரத்த வாந்தி நிற்க...
அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம்
எடுத்து பாலில் கலந்து 3_4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல்
நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.
தாய்ப்பால் பெருக....
போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப்
பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால்,
தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக
ஊட்டச்சத்து கிடைக்கும்.
வரட்டு இருமல் நீங்க...
அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம்
அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர்
சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது
மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு,
இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும்.
கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில்
ஆறிவிடும்.
இளநரை நீக்க...
அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக்
குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல்
இருக்காது.
நெஞ்சுச் சளி நீங்க....
அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம்
அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம்.
ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி
50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு
வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல்
நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில்
தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக,
சளித்தொல்லை நீங்கும்.
இருமல் நீங்க...
அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம்
எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30
நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம்
சாப்பிட்டால் இருமல் தீரும்..
மஞ்சள்காமாலை தீர...
அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம்
வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை
வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும்.
மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க
வேண்டும்.
தாது விருத்திக்கு...
அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச்
சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக
சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த
மூலிகையாகும்.
கருத்தரிக்க உதவும்...
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம்
எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய
நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக்
கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2_3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை
எதிர்பார்க்கலாம்.
வழுக்கை நீங்கி முடி வளர
அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால்
விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில்
கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை
வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு,
சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட
குறைகள்நிவர்த்தியாகும்.
தலைவலிகள் நீக்க...
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து,
தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு
தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி
நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும்
தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய்,
தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து
அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட
தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக
வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.
தொண்டை கரகரப்பு நீங்க...
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ்
நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால்
தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில்
உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.
ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த...
பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு
சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல்
இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்.
வெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது.
குழம்புக்கு, மற்ற பலகாரங்களுக்கு மணமூட்டுவதற்காகவும், தாளிக்க வேண்டுமானாலும் வெங்காயத்தின் உதவிதான் தேவை.
சிலவகை உணவுக்கு ருசி சேர்ப்பதே வெங்காயம்தான்.
வெங்காய சாம்பாரின் ருசியறியாத மக்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியுமா? வெங்காய காரக் குழம்பின் சுவைக்கு நிகர் ஏது?
வெங்காய வடை, வெங்காய தோசை, வெங்காய ரவா தோசை, வெங்காய சட்டினி,
தயிர்ப் பச்சடி என பட்டியல் போடத் தொடங்கினால் அந்தப் பட்டியலே ஒரு முழு
நூலாகிவிடும்.
வெங்காயம் வெறும் உணவுப் பண்டமாக மட்டுமின்றி, அற்புதமான
மருத்துவ ஆற்றல் படைத்த ஒரு பண்டமாகவும் இருக்கிறது என்ற உண்மையை மிகவும்
தொன்மைக் காலத்திலேயே நமது நாட்டு மக்கள் அறிந்திருந்தார்கள் என்பதற்குச்
சான்றுகள் உள்ளன. வெங்காயத்தின் தாயகம் தமிழகமோ அல்லது பாரத நாட்டின் பிற
மாநிலங்களோ அல்ல. எகிப்து நாடு.
உலகிலேயே முதன் முதலாக எகிப்து நாட்டு மக்கள்தான் வெங்காயத்தைச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
எகிப்திய மக்கள் அந்நாளில் வெங்காயத்தை தெய்வீக அம்சம் பொருந்தியதாகக்
கருதி வந்துள்ளனர். பக்தி பூர்வமாகச் செய்யப்படும் பெரிய பூஜைகளின்போது
வெங்காயமும், வெள்ளைப் பூண்டும் பூசனைக்குரிய மூர்த்திகள் போன்ற மதிப்புடன்
மரியாதையுடன் பூஜையில் இடம் பெறுவது வழக்கமாம்.
பண்டைய எகிப்திய நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படும்போது
வாதியும், பிரதிவாதியும் வெங்காயத்தின் மீது சத்தியப்பிரமாணம்
எடுத்துக்கொள்ளுமாறு கோரப்பட்டனராம். அத்தனை உயர்ந்த இடம் அதற்குத்
தரப்பட்டிருந்தது.
பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்...
வெங்காயத்தில் வைட்டமின் ‘சி’ சத்து மிகவும் அதிகமாக உண்டு. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் இந்தச் சத்து அதிகமாக உண்டு.
பெரும்பாலும் வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள
சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். பச்சை வெங்காயத்திலுள்ள கந்தக சத்து
சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச்
சாப்பிடலாம். முற்றின வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச் சாப்பிடலாம்.
உடல் பருமனைக் குறைக்க....
வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிக மிகக் குறைவு. அதனால் உடல்
பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்புவோர் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அழகாக மாற உதவும்...
இரத்த விருத்திக்கும் இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும்
உதவிகரமாக இருக்கிறது. அதனால் உடல் தேஜஸ் ஏற்பட்டு அழகாகிறது. உணவோடு
வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளும்போது அந்த உணவு வெகு எளிதில் ஜீரணமாக
வெங்காயம் உதவுகிறது.
உஷ்ணக் கடுப்பு அகல
பல்வேறு காரணங்களால் உஷ்ணம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல்
உஷ்ணத்தைச் சமனப்படுத்துகிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும்
ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.
சாதாரண தலைவலிக்கு
சாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடன் குணம் தெரியும்.
விசக் கடிக்கு
வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள், குளவி போன்ற விச ஜந்துக்கள் கடித்த இடத்தில் அழுந்தத் தேய்த்தால் வலி குறையும்.
இருமலுக்கு
பொதுவான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க
குணமாகும். முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை
வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும்.
மூளையின் சக்தி பெருகும்
மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிறது. அது நல்ல உடல் தேற்றும் டானிக்காகவும் திகழ்கிறது.
ஆகவே தினமும் வெங்காயத்தை ‘சூப்’பாகச் செய்து அடிக்கடி சாப்பிடலாம்.
இரவு உறங்கப் போவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காய சூப் சாப்பிடுவது மிகவும்
நல்லது. வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.
பல்வலி, ஈறு வலி
பற்களில் குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு.
அப்போது வலியும் எரிச்சலும் கடுமையாக இருக்கும். அந்தக் குறைபாட்டை அகற்ற
பதமான சுடுநீரில் தாராளமாக வெங்காயச் சாற்றைக் கலக்கி வாய் கொப்பளிக்க
வேண்டும்.
பிறகு வெங்காயச் சாற்றை கொஞ்சம் பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட பற்களில் நன்றாகத் தடவி விட வேண்டும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை
பல்வேறு காரணங்களால் பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளை ஒழுக்கிற்கு,
வெள்ளைப் பூண்டை தோல் நீக்கி 100 கிராம் அளவு சேகரித்து சாறு எடுத்து
பாதிப்புக்கு உள்ளான பெண்களுக்கு கொடுக்க குணம் தெரியும்.
உடல் அயர்வும் வலியும் நீங்க
அரைக் கீரையுடன் பூண்டும், மிளகும் தக்க அளவு சேர்த்து குழம்பு வைத்து
இரவு நேரத்தில் சாப்பிட உடலில் தோன்றும் அயர்வும், வலியும் நீங்கி உடல்
இலேசாகவும் சுகமாகவும் ஆகிவிடும்.
குடல் புழுக்கள் நீங்க
குழந்தைகளில் குடலில் புழுக்கள் உற்பத்தியானால் எப்போது வயிறு மந்தம்,
பசியற்ற நிலை, வந்து எவ்வளவு உணவு உட்கொண்டாலும், குழந்தைகள் நாளுக்கு நாள்
பலவீனமடையும். இதற்கு தோல் நீக்கப்பட்ட வெள்ளைப் பூண்டுடன் குப்பை மேனி
இலையைச் சேர்த்து நசுக்கி சாறு எடுத்து அதைச் சாற்றை குழந்தைகளுக்கு
கொடுக்க மலப் புழுக்கள் வெளிவந்துவிடும்.
பால் சுரப்புக்கு
குழந்தைப் பேறுக்குப் பிறகு சில தாய்மார்களுக்கு போதிய அளவு பால் சுரக்காமல் இருந்து விடுவதுண்டு
பசுவின் பாலில் இரண்டொரு வெள்ளைப் பூண்டு பற்களைப் போட்டு காய்ச்சி பூண்டை சாப்பிட்டு பாலை குடித்து விட வேண்டும்.
பச்சைக்
கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை
முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி
சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து
கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப்
பார்ப்போம்.முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப்
பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை
குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும்
மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது
முருங்கைக் கீரை.
சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும்
முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது
எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக
காண்போம்.
இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க
வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால்
சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற
பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய
உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.
முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய
இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு
பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால்
உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.
முருங்கை
இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த
இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர் களின் உடம்பில்
நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.
முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த
விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.
முருங்கைக்
காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய்
சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும்
இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு
மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை
காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன.
வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல்,
மூட்டு வலியையும் போக்க வல்லது. முருங்கை விதையைக் கூட்டு செய்து
சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு
பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.
முருங்கை
மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது.
பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று
விடும்.
இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட
டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம்
வராமல் தள்ளிப்போகும்.
மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி
செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான்
என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை
லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு
அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.
முருங்கை
இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு
தந்தால்,இரத்தசுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில்
கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம்,அயம்,வைட்டமின் உள்ளது.
கர்ப்பையின்
மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு
தயாரிக்கப்படும் பதார்தம்,தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்
ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சுப்
நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப்
போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை
இரத்த விருத்திக்கும்,விந்து விருத்திக்கும் சிறந்தது.
முருங்கை
இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.
முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி
இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு
கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை,குடலில்ஏற்படு ம்
திருகுவலு,வயிற்றுப்போக்க ு கட்டுபடும். விதையில் இருந்து என்னை தயாரித்து
வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து
சாறெடுத்து பாலுடன் செர்த்துப பருகிவர காசநோய்,கீழ்வாயு,முதுகுவலி
குணப்படும்.
வைட்டமின்கள் : முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது. ஈரபதம்-75.9% புரதம்-6.7% கொழுப்பு-1.7% தாதுக்கள்-2.3% இழைப்பண்டம்-0.9% கார்போஹைட்ரேட்கள்-12.5% தாதுக்கள்,வைட்டமின்கள், கால்சியம்-440 மி,கி பாஸ்பரஸ்- 70மி.கி அயம்- 7 மி.கி வைட்டமின் சி 220 மி.கி வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்
இந்தியாவில்
எண்பது சதவிகிதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தலைவலி, காய்ச்சல் போல
முதுகுவலியும் இருக்கிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது இருபது
வயதிலிருந்து முப்பத்தைந்து வயது வரை உள்ளவர்கள்தான். அதுவும் குறிப்பாக
பெண்கள்தான் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள்.
இதனால் இவர்களின் ஆபீஸ் வேலை கெடுவதுடன், மனதளவிலும் பல பாதிப்புகளை
அடைகிறார்கள். மனச்சோர்வு, ஒருவித அச்சம் இவர்களைத் தொற்றிக்கொள்கிறது.
சமயத்தில் வாழ்க்கையே வெறுத்து விட்டதாகக் கூட முதுகுவலி வந்தவர்கள்
சொல்லக் கேட்டதுண்டு. அலுவலகத்திற்கு அதிகநாட்கள் விடுமுறை எடுக்க
வேண்டியிருப்பதால், வேலை தொடர்பான பல பிரச்னைகளைச் சந்திக்க
வேண்டியுள்ளதும் மன உளைச்சலுக்கு ஒரு காரணமாகும்.
சிலருக்கு ஐம்பது, அறுபது வயதில் முதுகுவலி வரும். அது வயதாவதால்
இருக்கலாம். அல்லது வேறு சில பிரச்னைகளாக இருக்கலாம். எதுவாகயிருந்தாலும்
ஆரம்பநிலையிலேயே மருத்துவரிடம் போவது புத்திசாலித்தனம்.
முதுகுவலி ஏன் வருகிறது?
நம் முதுகெலும்பில் உள்ள டிஸ்க் நழுவிவிட்டது (டிஸ்க் ப் ரொலாப்ஸ்) என்றால்தான் முதுகுவலி வருகிறது.
நம் முதுகெலும்பு 33 முள் எலும்புகளால் ஆனது. ஒவ்வொன்றிலும் ஒரு
தட்டுப்போன்ற வட்டு உள்ளது. இந்த வட்டுக்களிடையே பசை போன்ற ஜெல்
இருக்கிறது. இந்தப் பசைதான் முதுகெலும்பில் அழுத்தத்தைத் தாங்கவும்
உராய்வைத் தடுக்கவும் உதவுகிறது.
சிலர் தவறாக ஒரே நிலையில் உட்காரும் போதும் நிற்கும் போதும்
முதுகெலும்புக்கு ஏற்படும் அழுத்தத்தால்தான் வலி உண்டாகிறது. இதன்
அறிகுறியாக சிலருக்கு ஒரு காலிலோ இரு காலிலோ வலி இருக்கும். இடுப்பிலும்
வலி தெரியும்.
இந்தத் தவறான நிலை பலநாள் தொடரும்போது ஏற்படும் அழுத்தத்தால்
வட்டுக்களிடையே உள்ள பசை வெளியே வந்துவிடும். வெளிவந்த பசையானது மற்ற ஆதார
உறுப்புகளுக்குச் செல்லும் நரம்புகளை அழுத்துவதால் கடுமையான வலியை
உண்டாக்குகின்றது. இதைத்தான் டிஸ்க் நழுவிவிட்டது என்கிறார்கள்.
யார் யாருக்கு முதுகுவலி வரும்?
நீண்டதூரம் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், அதிகநேரம் கம்ப்யூட்டரில்
வேலை செய்பவர்கள், ஒழுங்கற்ற படுக்கை, சிலவகை மெத்தையில் ((உ_ம்) ஃபோர்ம்
மெத்தையில் படுப்பவர்கள்), சக்திக்கு மீறிய கனமான பொருட்களைத் தனியே
தூக்குபவர்கள், எந்தப் பொருளை எப்படித் தூக்குவது என்ற விவரம்
தெரியாதவர்கள், சரியாக, நேராக உட்காராமல் நீண்ட நேரத்திற்கு ஒரு பக்கமாகவே
உட்காருபவர்கள், அல்லது நிற்பவர்கள், மெனோபாஸ் காலப்பெண்கள் ஆகியோருக்கு
லேசு லேசாக ஆரம்பிக்கும் முதுகுவலி, கண்டு கொள்ளாமல் விட்டால் அதிக வலியாக
மாறி விடக்கூடும். ஆண், பெண் இருவருக்கும் உடலின் எடை கூடுவதும்
முதுகுவலிக்கு முக்கியக் காரணமாகும். கூடுதல் எடை முதுகெலும்பில்
அழுத்தத்தை ஏற்படுத்துவதால் வலி உண்டாகிறது. இதற்கு நடைப்பயிற்சி அவசியம்.
நடப்பது நம் முதுகு, இடுப்புத் தசைகளை உறுதியாக்கும்.
பெண்களுக்கு முதுகுவலி அதிகம் வருவது எதனால்?
பெண்களுக்கு மெனோபாஸ் (மாதவிடாய் முற்றிலும் நிற்கும் சமயம்) காலத்தில்
முதுகுவலி வருவதுண்டு. இந்தச் சமயத்தில் பெண்களுக்குத் தேவையான
கால்சியத்தை அளிக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் குறையும். இதனால்தான் வலி
உண்டாகிறது. இதுதான் ஆஸ்டியோ ஃபொரோசிஸ் என்ற எலும்பு முறிவு நோய்க்கும்
அறிகுறி. இதைத் தடுக்க பெண்கள் மெனோபாஸ் சமயத்திற்கு முன்பே மருத்துவரிடம்
கலந்து ஆலோசித்து பிஸிஜி (ஹார்மோன் ரீபிபோப்மெண்ட் தெரபி) சிகிச்சை
எடுத்துக் கொள்வது நல்லது.
முதுகுவலிக்கு குட்பை சொல்ல எளிய வழிகள் :
1. படுக்கையில் கவனம் தேவை :
நாம் படுக்கும் படுக்கையும் முதுகுவலிக்கு ஒரு முக்கியக் காரணமாக
உள்ளது. ஃபோம் மெத்தைகள் முதுகுவலிக்கு ஒரு காரணம். அதனால் ஃபோம்
மெத்தையில் படுக்கவே கூடாது. இலவம் பஞ்சு மெத்தைகள், பாய், ஜமுக்காளம்
மிகவும் நல்லது. உயரம் குறைந்த தலையணை முதுகுவலியைக் குறைக்கும்.
2. நீண்டதூர இரு சக்கரவாகனப் பயணத்தைத் தவிர்த்தல் :
நீண்டதூரம் இரு சக்கரவாகனங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதுவும்
மேடு பள்ளங்களில் வேகமாகச் செல்லக் கூடாது. வாகனங்களில் முன்னால் அதிகம்
வளையாமல் நிமிர்ந்து உட்கார்ந்து ஓட்ட வேண்டும்.
3. அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் சேரோடு சேராக உட்கார்ந்து இருக்காமல்,
அரைமணிக்கு ஒரு முறை ஒரு நிமிடம் எழுந்து நடந்து பின்னர் வேலையைத்
தொடரவேண்டும்.
4. கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் உயரம் சரியாக உள்ள நாற்காலியில்
அமர வேண்டும். சேரில் உட்காரும்போது எதிரில் உள்ள மானிட்டரின் நடுவில்
உங்கள் மூக்குத் தெரிந்தால் நீங்கள் உட்கார்ந்திருப்பது சரியான உயரம்.
5. சேரில் உட்காரும்போது உங்கள் பாதங்கள் தரையில் பதிந்திருக்கும் படி
உட்காருங்கள். உயரம் போதவில்லை என்றால் பாதம் படியும்படி உயரமாக எதையாவது
உபயோகியுங்கள். பாதத்தின் நிலையை அடிக்கடி மாற்றுங்கள்.
6. சேரில் உட்காரும்போது முழங்காலை விட இடுப்பு சற்று உயரமாக இருப்பது நல்லது.
7. நாம் உட்காரும்போது 40 சதவீத எடையை பின்கழுத்துப் பகுதி
எலும்புகளும் இடுப்புப் பகுதி எலும்புகளும்தான் தாங்குகின்றன. அதனால்
சேரில் நன்றாக நிமிர்ந்து இடுப்புப் பகுதி நன்கு சேரில் பதியும்படி உட்கார
வேண்டும். தேவைப்பட்டால் முதுக்குப் பின் குஷன் பயன்படுத்தலாம்.
8. எந்தப் பொருளை எப்படித் தூக்க வேண்டுமோ அப்படித் தூக்க வேண்டும்.
இரண்டாக வளைந்து குனிந்து பொருட்களை எடுக்கவோ தூக்கவோ கூடாது. கால்களை
அகட்டி, முதுகெலும்பை வளைக்காமல் தூக்கிப் பழகிக் கொள்ளுங்கள். கனமான
பொருட்களைக் கைகயில் வைத்துக் கொண்டு அப்படியே திரும்பிப் பார்க்கக்
கூடாது.
9. நடைப்பயிற்சி: உடல் எடை அதிகம் உள்ளவர்கள்
மட்டுமல்ல, மற்றவர்களும் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
நடைப்பயிற்சியில் முதுகு, இடுப்பு தசைகள் உறுதியாகின்றன. இது முதுகுவலி
வராமல் தடுக்க உதவும். எந்தக் காரணத்தைக் கொண்டும் அதிக ஹீல்ஸ் உள்ள
செருப்புகளைப் பயன்படுத்தவே கூடாது.
முதுகுவலியை சுலபமாகக் குணப்படுத்தி விடலாம். அதற்கு ஆரம்பத்திலேயே
கவனம் தேவை. இதனால் அதிகம் செலவு செய்யவேண்டியதில்லை. பயப்படவும்
தேவையில்லை.
லேசான வலிகளைக் கவனிக்காமல் விடும்போதுதான் அவை அறுவை சிகிச்சை வரை
பெரிதாகி விடுகின்றன. இப்போது முதுகெலும்பில் அறுவை சிகிச்சை செய்வது
எளிது. ஒரேநாளில் கூட எழுந்து நடக்க முடியும். இந்தநிலை நமக்கு ஏன்? முன்பே
எச்சரிக்கையுடன் இருந்து கொண்டால் நல்லதுதானே. மேலே சொன்ன வழிகள்
முதுகுவலியை வரவிடாமல் செய்யும் எளியவழிகள்தான். முயன்று பாருங்கள்.
இரைப்பைக்கும் முன் சிறுகுடலுக்கும் இடையில் உள்ள கணையம் (Pancreas)
என்ற உறுப்புதான் இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. ரத்தத்தில்
சர்க்கரையின் (குளுகோஸ்) அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது இந்த
இன்சுலின்தான். ஒருவேளை, இன்சுலின் சுரப்பது குறைந்துபோனாலோ அல்லது
நின்றுபோனாலோ சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதைத்தான் சர்க்கரை நோய்
அல்லது நீரிழிவு என்கிறார்கள்.
புதிய ஆய்வுகள்!
மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சர்க்கரை நோய்க்கும் இதயம் தொடர்பான
நோய்க்கும் (Cardiovascular disease CVD) உள்ள நெருக்கம் பற்றி புதிது
புதிதாக ஆராய்ந்து வருகிறார்கள். பொதுவாக, இரத்தத்திற்கு வெளியே இன்சுலின்
குளுக்கோஸாக மாறிய பின்னர்தான் ரத்த செல்களுக்குள் செல்லும். ஆனால்,
குளுக்கோஸின் அளவு கூடினால், ரத்த ஓட்டத்தில் உள்ள இன்சுலினை பயன்படுத்த
முடியாமல் உடலானது பம்ப் பண்ணுவதால், சர்க்கரை நோய் அதிகரிக்கும் அபாயம்
ஏற்படுகிறது. இதனால்தான் இதயநோய் (CVD) மாதிரியான நோய்கள் வருகின்றன.
இன்சுலின் அளவும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அநியாயத்திற்கு
உயரும்போது ரத்த நாளங்களில் கொழுப்புகள் அதிகப்படியாக படிவதாலும் இதய நோய்
வரலாம் என்கிறார்கள்.
மருத்துவ ஆய்வாளர்களின் ஆய்வுப்படி, நடுத்தர வயதுடையவர்களில் அதிக
எடையுள்ளவர்களுக்குத்தான் (over weight) இன்சுலின் சுரப்பதில் தடையும்
ரத்தத்தில் அதிகளவு குளுக்கோஸ§ம் இருப்பது தெரிய வந்துள்ளது.
இவர்களுக்குத்தான் ‘ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ராலும் (unhealthy
cholesterol) உயர் ரத்த அழுத்தப் பிரச்னையும் இருக்கும். இதனால்தான்
சர்க்கரை நோய் (diabetes), இதயநோய் (Heart disease), இதயத்தாக்கம்
(stroke) போன்றவற்றிற்கான நோய் அறிகுறிகள் வெளிப்படுகின்றன.
கீழே உள்ள சில வழிமுறைகள், உடலில் இன்சுலின் சுரப்பதில் பிரச்னை
இருந்தாலோ, மற்ற நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அவற்றை எதிர்த்துப்
போராடி, சரிசெய்ய உதவும்.
1. நடவுங்கள்... டயாபடீஸை விரட்டலாம் :
அதிக எடை உள்ளவர்களுக்கும் உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் உடலில்
உள்ள உள்ளுறுப்புகளைச் சுற்றிலும் கொழுப்பு மறைந்திருக்கும். அதோடு
இன்சுலின் சுரப்பதில் தடையும், இதயநோய் சம்பந்தப்பட்டதும் இருக்கும்.
இதனைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி மிகமிக உயர்ந்த வழி.
முறையான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு எட்டு மாதத்திற்குப் பிறகு 8
சதவீத கொழுப்பு கரைந்து விட்டதாகவும், அடிவயிற்றில் உள்ள கொழுப்பு
குறைந்து தொப்பையின் அளவு குறைந்ததையும் கண்டுபிடித்தார்கள். ஒரு நாளைக்கு
30 நிமிடம் என்று வாரத்திற்கு ஐந்து நாட்கள் நடப்பவர்கள் ஐந்து முதல் ஏழு
சதவீதம் வரை உடல் எடையைக் குறைக்கமுடியும். 58 சதவீதம் சர்க்கரை நோய்
அபாயத்தைத் தடுக்கமுடியும்.
ஏற்கெனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சி மிகமிக அவசியம்.
அதிகம் டைப்_2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு நான்கு மணி நேரம்
சுறுசுறுப்பாக நடந்தால், மற்றவர்களைவிட இவர்களுக்கு இதயநோய் அபாயம்
மிகமிகக் குறைவு.
2. காலை உணவைச் சாப்பிட மறக்காதீர்கள்!
காலையில் எழுந்ததும் காலை உணவை ஒழுங்காகச் சாப்பிடாதவர்கள் மற்றும்
அடிக்கடி காலை உணவைத் தவிர்ப்பவர்களைவிட, ஒழுங்காகச் சாப்பிடுபவர்களுக்கு
உடற்பருமனும் இன்சுலின் சுரப்பதில் தடையும் 35 முதல் 50 சதவீதம் வரை
குறையும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால், காலை உணவை யாரும்
தவறவிடாதீர்கள். குறிப்பாக நவதானிய உணவுகள் சேர்ப்பது நல்லது.
3. மகிழ்வான சூழல் : (Laugh it up)
பொதுவாக நன்றாகச் சிரிப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் வர வாய்ப்பு
குறைவு. அவர்களுக்கு நோயெதிர்ப்புச் சக்தியும், நல்ல மூடும் உருவாகும்
என்றெல்லாம் முன்பே சொல்லப்பட்டன.
இப்போது, டைப்_2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் நன்றாக வாய்விட்டுச்
சிரித்தால், சாப்பாட்டிற்குப் பிறகு Êஏறும் குளுக்கோஸின் அளவு மிகமிக
குறைவு என்கிறார்கள்.
இந்நோய் உள்ளவர்களை இரண்டு தனித்தனி நாட்களில் பரிசோதித்துப் பார்த்து இந்த முடிவை வெளியிட்டிருக்கிறார்கள்.
ஒருநாள் சீரியஸான விரிவுரையைக் கேட்க வைத்திருக்கிறார்கள். இன்னொரு
நாள் நன்றாக வாய்விட்டுச் சிரிக்கும் காமெடி நிகழ்ச்சியில் பங்குகொள்ள
வைத்திருக்கிறார்கள். சீரியஸான விரிவுரையைக் கேட்ட நாளைவிட, காமெடி
நிகழ்ச்சியில் கலந்து வாய்விட்டுச் சிரித்த நாளில் அவர்களின் குளுக்கோஸ்
அளவு குறிப்பிட்ட அளவு குறைந்திருந்ததைக் காட்டியதாம்.
4. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்:
உயர் ரத்த அழுத்தமும் சர்க்கரை நோயும் அடிக்கடி மாறி மாறி, இதய நோய்,
இதயத் தாக்கம் என்று கொண்டுபோய் விடுகின்றன. ஆனால், ரத்த அழுத்தத்தைக்
கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் 44 சதவீத சர்க்கரை நோய் தொடர்பான தாக்கம்
வராது என்கிறார்கள்.
சர்க்கரை நோய் வந்த பின்னர், அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க
எடுத்துக்கொள்ளும் சிரத்தையில் கொஞ்சமாவது அந்நோய் வரும்முன் காட்டினால்
போதும். சர்க்கரை நோயை வரவிடாமல் தடுக்கலாம். சர்க்கரை நோயைத் தடுப்பது
என்பது, அதனுடன் தொடர்புடைய இதய நோய்கள், கிட்னி பிரச்னைகள் வராமல்
காப்பதற்குச் சமமானதாகும்.
மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!!
காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது என்பதை நாம் அறிவோம். தினமும்
காலை ஆரோக்கியமாக சாப்பிட்டால், புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற
நோய்களின் இடர்பாடுகள் குறையும்.
ஆனால் காலை உணவிற்காக நாம்
தேர்ந்தெடுக்கும் சில உணவுகள் ஒட்டுமொத்தமாக தவறான தேர்வாகி போவது
உங்களுக்கு தெரியுமா? ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால் நீங்கள் நோயாளிகள்
ஆகலாம். அதனால் அவைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? இதோ காலையில்
நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளின் விவரங்கள் கீழ்வருமாறு...
1.சர்க்கரை கலந்த தானியங்கள் மற்றும் பேக்கரி உணவுகள்
சில
தானியங்கள் முழுவதும் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையால்
நிறைந்திருக்கும். அவைகளை உட்கொள்ளும் போது, உங்கள் இரத்தத்தில் உள்ள
சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரித்து பின் கீழிறங்கும். நாளின்
தொடக்கத்திலேயே உங்கள் ஆற்றல் திறனை அடி வாங்க செய்து விடாதீர்கள். அதனால்
இவ்வகை தானியங்கள் மற்றும் பேக்கரி உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
மாறாக, அதிக நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அடங்கியுள்ள தானியங்களை
உண்ணுங்கள். ஆளிவிதை அல்லது வால்நட்ஸை சேர்த்துக் கொண்டால் கூடுதல்
நார்ச்சத்தும், புரதமும் கிடைக்கும்.
2.பேக் செய்யப்பட்ட பேன்கேக்
பேக்
செய்யப்பட்ட பேன்கேக்குகளில் சர்க்கரை அல்லது தேனால் கோட்டிங்
செய்யப்பட்டிருக்கும். இவை நம் வாய்க்கு சுவையை அதிகரிக்க மட்டுமே உதவும்.
ஆகவே உங்களுக்கும், உங்கள் இடைக்கும் நல்லது செய்ய வேண்டுமானால், அவைக்களை
தவிர்த்து, முழு கோதுமையில் லேசாக வெண்ணெய் தடவி செய்யப்பட்ட டோஸ்ட்டை
உண்ணுங்கள்.
3.கடையில் வாங்கப்படும் க்ரானோலா (Granola)
கடையில்
வாங்கப்படும் பல வித க்ரானோலாக்களும் ஆரோக்கியமானதாக தெரியும். அதற்கு
காரணம் அதிலுள்ள தேன், சர்க்கரை, ஓட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்களின் கலவை.
ஆனால் அதில் அதிகமாக இருப்பது கொழுப்பும் கலோரிகளும் தான். பல க்ரானோலாவில்
மறைக்கப்பட்ட சர்க்கரையும் இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பேக்
செய்யப்பட்ட அதன் பெட்டியில் உள்ள விவரத்தை படித்து, அது ஆர்கானிக் உணவா
அல்லது எளிய சர்க்கரையில் செய்யப்பட்ட இயற்க்கை வகையா என்பதை தெரிந்து
கொள்வது மட்டும் தான். அப்படி இல்லையென்றால் காலை உணவிற்கு நீங்கள்
உண்ணுவது டெசர்ட் ஆகி விடும்.
4.கடையில் வாங்கும் சாண்ட்விச்
முட்டை,
இறைச்சி, சீஸ் மற்றும் ரொட்டி டோஸ்ட்டுடன் சேர்ந்து சமநிலையுடன் கூடிய
காலை உணவாக சாண்ட்விச் விளங்கலாம். ஆனால் கடையில் வாங்கிய சாண்ட்விச்சை
பிரித்து பார்த்தால், பிசுபிசுவென இருக்கும் பொறித்த முட்டை,
பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி மற்றும் கொழுப்புள்ள சீஸை மட்டும் தான் காண
முடியும். அதனால் குறைந்த கொழுப்பை உடைய சீஸ் மற்றும் முட்டையுடன்
வீட்டில் தயாரிக்கப்பட்ட சாண்ட்விச்சையே உண்ணுங்கள்.
5.ஸ்மூத்தீஸ்
ஸ்மூத்தீஸ்
முழுவதுமே சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையால் செய்யப்படுபவை. கடையில்
வாங்கப்படுவதில் கொழுப்பு நிறைந்த பால் அல்லது க்ரீம் தான் அதிகமாக
இருக்கும். அதனால் காலை உணவிற்கு அது ஒரு டெசர்ட் பானம் போல் தான்
இருக்கும். மாறாக தயிர், பாதாம் அல்லது கடைந்த பால் மற்றும் நற்பதமான
பழங்கள் மற்றும் நட்ஸ்களையும் சேர்த்து வீட்டிலேயே தயார் செய்யுங்கள்.
Wynn Las Vegas - MapyRO Hotel information, map and reviews 안양 출장샵 of Wynn Las Vegas, 화성 출장안마 Las Vegas in Las Vegas, NV. Address: 217 안산 출장샵 Las 성남 출장마사지 Vegas Blvd S, Las Vegas, 정읍 출장안마 NV 89109.
Wynn Las Vegas - MapyRO
ReplyDeleteHotel information, map and reviews 안양 출장샵 of Wynn Las Vegas, 화성 출장안마 Las Vegas in Las Vegas, NV. Address: 217 안산 출장샵 Las 성남 출장마사지 Vegas Blvd S, Las Vegas, 정읍 출장안마 NV 89109.